சுவிட்சர்லாந்தில் வாழ்க்கை கிட்டத்தட்ட சாத்தியமேயில்லை: வெளிநாட்டவர்கள் கூறும் காரணங்கள்
வெளியே இருந்து பார்ப்பதற்கு அழகாகவும் அமைதியாகவும் காணப்படுகிறது சுவிட்சர்லாந்து. ஆனால், அங்கு வாழ்க்கை கடினம் என்கிறார்கள் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள்.
வெளிநாட்டவர்களைக் கவரும் சுவிட்சர்லாந்தின் உண்மை நிலை
வெளிநாட்டவர்கள் பலர் வாழ விரும்பும் கனவு நாடாக விளங்குகிறது சுவிட்சர்லாந்து. ஆனால், சில விடயங்கள் வாழ்க்கையைக் கடினமாக்குவதாக தெரிவித்துள்ளார் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் சிலர்.
The InterNations என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், சுவிட்சர்லாந்தில் வாழும் பல்வேறு நாட்டவர்களிடம் சுவிட்சர்லாந்து வாழ்க்கை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
வெளிநாட்டவர்கள் கூறியுள்ள கருத்துக்கள்
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட வெளிநாட்டவர்களில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், சுவிட்சர்லாந்தில் வீடு கிடைப்பது கஷ்டம் என்றும், சுமார் 60 சதவிகிதம் பேர் வீட்டு வாடகை கொடுப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார்கள்.
பிரான்ஸ் நாட்டவரான ஒருவர், சுவிட்சர்லாந்தில் வீடு வாங்குவது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை என்றும், வாடகையோ மிகவும் அதிகம் என்றும் கூறியுள்ளார்.
Image: Getty
Mercer என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வில், உலகின் விலைவாசி அதிகமான நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று என தெரியவந்துள்ளது.
சுமார் 60 சதவிகிதம்பேர், சுவிட்சர்லாந்தில் வீடு வாங்குவதற்கு பதிலாக, வாடகைக்கு இருப்பதாக InterNations அமைப்பு தெரிவிக்கிறது.
உள்ளூர் மக்கள் நட்பாக இருப்பதில்லை என்று வெளிநாட்டவர்கள் பலர் கூறும் நிலையில்,சுமார் 45 சதவிகிதத்தினர், தங்களுக்கு நண்பர்கள் என்றால், அவர்கள் தங்களைப் போலவே வேறொரு நாட்டிலிருந்து வந்த வெளிநாட்டவர்கள்தான் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.