பிரான்சில் பிரித்தானிய குடும்பம் ஒன்றிற்கு 3,000 யூரோக்கள் அபராதம்: சுவாரஸ்யப் பின்னணி
தொடர்ந்து சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றிய ஒரு பிரித்தானியக் குடும்பத்துக்கு பிரான்ஸ் அதிகாரிகள் 3,000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளார்கள்.
பிரித்தானியக் குடும்பம் ஒன்று, பிரான்சில் தொடர்ச்சியாக சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றிவந்துள்ளது.
3,000 யூரோக்கள் அபராதம்
இந்நிலையில், Saint-Maurice-Colombier என்னுமிடத்தில் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது அந்தக் குடும்பம்.
அப்போது, ஆறு மாதங்களாக அந்தக் குடும்பத்தினர் சுங்க கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றிவந்தது தெரியவந்துள்ளது.
அதாவது, மூன்று கார்களில் அந்தக் குடும்பத்தினர் பயணிப்பது வழக்கமாம். எங்காவது சுங்கச் சாவடி இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், காரை விட்டு இறங்கி, குறுக்கே நிற்கும் தடைக் கம்பத்தை கையால் தூக்கிப் பிடிக்க, கார்கள் நைசாக அங்கிருந்து சென்றுவிடுமாம்.

இந்நிலையில், அவர்கள் வசமாக பொலிசாரிடம் சிக்கியதைத் தொடர்ந்து, செலுத்தத் தவறிய கட்டணம், அதற்கான மதிப்புக் கூட்டு வரி, விதி மீறலுக்கான அபராதம் என மொத்தம் 3,000 யூரோக்கள் செலுத்த அந்தக் குடும்பத்தினருக்கு பிரான்ஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |