விடுமுறைக்கு சென்ற பிரித்தானிய குடும்பம்: வெளிநாட்டில் நடந்த கோர சம்பவம்!
விடுமுறைக்காக போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்ற பிரித்தானிய குடும்பம் ஒன்று சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய பிரித்தானிய குடும்பம்
போர்ச்சுக்கல் நாட்டிற்கு விடுமுறைக்காக சென்ற பிரித்தானிய குடும்பம் டொமிங்கோஸ் செரானோ, மனைவி மரியா, மகன்கள் டொமிங்கோஸ் மற்றும் அஃபோன்சோ ஆகியோர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து வாடகை காரை எடுத்து கொண்டு புறப்பட்ட குடும்பத்தினர், 80 கி.மீ வேக வரம்புள்ள IP2 சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் முழுவதும் சிதலமடைந்த காரை கண்டு அதிர்ச்சியடைந்தனர், அத்துடன் விபத்தின் தீவிரம் காரணமாக உயிரிழந்தவர்களின் அடையாளங்களை கண்டறிவதும் கடினமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

டிரம்ப்-புடின் சந்திப்பு: பேச்சுவார்த்தையில் உக்ரைன் நிச்சயம் இருக்க வேண்டும்! ஐரோப்பிய நாடுகள் உறுதி
விபத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த மகள்
உயிரிழந்த குடும்பத்தினரின் மகள், விபத்து குறித்து அறிந்து அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போது முடியாததால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர்கள் வாடகை கார் எடுக்கப்பட்ட பாரோ விமானத்தில் ஆதாரங்களை சரிபார்த்து, மகளிடம் அவரது குடும்பத்தினரின் உயிரிழப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவர்களுடன் மற்றொரு காரை ஓட்டிய நபர் ரூபன் கோன்சால்வ்ஸ் என்பதையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த துயர சம்பவம் அந்நாட்டு உள்ளூர் மக்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |