கேரளாவில் பழுதாகி நிற்கும் ரூ.924 கோடி மதிப்பிலான போர் விமானம்.., பிரிட்டனுக்கே கொண்டு செல்ல பரிசீலனை
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேரளாவில் பழுதாகி நிற்கும் ரூ.924 கோடி மதிப்பிலான போர் விமானம் பிரிட்டனுக்கே கொண்டு செல்ல பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து பரிசீலனை
பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான எப்-35பி ரக விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் 19 நாட்களுக்கு முன்பு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

17 வயதில் தந்தையை இழந்து டெலிவரி பாயாக பணியாற்றியவர்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரி
இந்த போர் விமானத்தின் விலை அதிகபட்சம் என்று கூறப்படுகிறது. அதாவது ஒரு விமானத்தின் விலை 110 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.924 கோடி).
இந்நிலையில், இந்த விமானத்தை பழுது செய்யும் முயற்சி தோல்வி அடைந்ததால், விமானத்தை சி-17 குளோப்மாஸ்டர் சரக்கு விமானம் மூலமாக மீண்டும் பிரிட்டனுக்கே கொண்டு செல்ல பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கான வேலையை லாக்ஹீட் மார்டினில் பயிற்சி பெற்ற பொறியாளர்கள் மட்டுமே செய்து முடிக்க முடியும்.
இந்த வகைப்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய போர் விமானத்தை பிரித்தெடுக்கும் பணிகளை பிரிட்டீஷ் ராணுவம் கவனித்து கொண்டிருக்கும்.
மேலும், எப்-35பி ரக விமானத்தின் இறக்கைகளை அகற்றி சரக்கு விமானத்தில் ஏற்ற வேண்டும். இந்த விமானமானது ரேடார் தடுப்பான்களைக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |