வெளிநாட்டில் தூக்குத்தண்டனையை எதிர்கொள்ளும் ஐ.எஸ் படையில் இணைந்த பிரித்தானியர்கள்
ஐ.எஸ் படையில் இணைந்துள்ள பிரித்தானியர்கள் அமெரிக்க இராணுவத்தால் சிரியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து ஈராக்கில் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நூற்றுக்கணக்கானோரை
சிரியாவில் குர்திஷ் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பு முகாம்களில் சுமார் 100,000 ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் எவரையும் அவர்களின் சொந்த நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன. ஈராக்கிற்கு மாற்றப்படவிருக்கும் ஆயிரக்கணக்கான ஐ.எஸ் பயங்கரவாதிகளில் சிலர் வெளிநாட்டவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளில், ஈராக் தனது கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ், ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு வைத்திருந்த நூற்றுக்கணக்கானோரைத் தூக்கிலிட்டுள்ளது.
இந்த நிலையில், Reprieve என்ற மனித உரிமைகள் அமைப்பின்படி, சிரியாவில் உள்ள ஐ.எஸ் சிறைகளில் குறைந்தது பத்து பிரித்தானிய வம்சாவளி ஆண்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோரின் பிரித்தானியக் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரித்தானியக் கைதிகள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படாமல், சித்திரவதை மற்றும் மரணதண்டனைக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர் என்றே Reprieve தெரிவித்துள்ளது.
இதனிடையே, 2015-ல் ஐ.எஸ் படையில் சேருவதற்காக லண்டனிலிருந்து சென்ற ஷமிமா பேகம் உட்பட, சுமார் 55 பிற பிரித்தானியர்கள் அல்லது முன்னாள் பிரித்தானியக் குடிமக்களும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தக்கூடும்
அவர்களில் ஏறக்குறைய பாதி பேர் சிறார்கள் என்றே நம்பப்படுகிறது. இந்த நிலையில், குர்துகள் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் சிரிய இராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், இந்த முகாம்கள் தற்போது சிக்கியுள்ளன.
நடந்து வரும் மோதல்கள், அல்-ஹோல் சிறை முகாம் உட்பட, பல முகாம்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு வழிவகுத்துள்ளன. இதனிடையே, அமெரிக்க இராணுவம் புதன்கிழமை அன்று, தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த மிகவும் ஆபத்தான 150 பயங்கரவாதிகளை ஈராக்கிற்கு மாற்றியதுடன், மேலும் 7,000 பேரை இடமாற்றம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

பயங்கரவாதிகளில் பலர் ஐரோப்பாவிற்குத் திரும்பி வந்து தாக்குதல்களை நடத்தக்கூடும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கவலைப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஈராக்கில் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கலில் பிரித்தானியர்களும் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்த 100,000 ஐ.எஸ் பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் ஈராக்கியர்கள், அடுத்து பல நாடுகளைச் சேர்ந்த அரேபியர்கள்,
தொடர்ந்து பிரித்தானியர்கள், பிரெஞ்சு நாட்டவர்கள், ஜேர்மன், பெல்ஜியம் மற்றும் ஸ்வீடன் நாட்டவர்களும் குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாட்டவர்களும் இதில் உட்பட்டுள்ளனர்.
இதில் எத்தனை எண்ணிக்கையில் பிரித்தானியர்கள் என்பது தெரிய வாய்ப்பில்லை என்றும், கடந்த பல வருடங்களாக வெளிச்சம் உள்ளே புகாத சிறைகளில் இவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |