சுற்றுலா சென்றபோது மாயமான பிரித்தானிய சிறுமியின் சகோதரி: 16 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக...
போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது மாயமான பிரித்தானியச் சிறுமி மேட்லின் மெக்கேனை நினைவிருக்கலாம்.
அவர் இப்போது உயிருடன் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்னும் எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
பிள்ளையைத் தவறவிட்ட பிரித்தானிய பெற்றோர்
2007ஆம் ஆண்டு, மே மாதம் 3ஆம் திகதி, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது தங்கள் மகளான மேட்லின் மெக்கேன் (Madeleine McCann) என்ற மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் கேட் மற்றும் கெர்ரி மெக்கேன் என்னும் பிரித்தானியத் தம்பதியர்.
Credit: Splash
பிள்ளைகளை தூங்கவைத்துவிட்டு அருகிலுள்ள உணவகத்துக்குச் சென்ற அவர்கள், சாப்பிட்டுவிட்டு தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்கு வந்தபோது, தூங்கிக்கொண்டிருந்த மேட்லின் மாயமாகியிருந்தாள்.
Credit: Paul Tonge
அவளைத் தேட எடுத்துக்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
16 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக...
மேட்லின் காணாமல் போய் 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவள் காணாமல்போனபோது, அவளுடன் அவளுடைய தங்கையான Amelieயும் தம்பியான Seanம் அவளுடன் தூங்கிக்கொண்டிருந்தனர்.
மேட்லின் காணாமல் போன பிறகு, Amelieயின் புகைப்படமோ, அவளது சகோதரனுடைய புகைப்படமோ வெளியானதில்லை. அவர்கள் இருவரும் இரட்டையர்கள். அவர்களுக்கு இப்போது 18 வயதாகிறது. மேட்லின் அவர்களுடன் இருந்திருந்தால் அவளுக்கு இப்போது 19 வயதாகியிருக்கும்.
Credit: Paul Tonge
இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள Rothley என்ற இடத்தில் வாழும் மேட்லினுடைய குடும்பத்தினர், மேட்லின் காணாமல் போனதன் 16ஆவது நினைவுநாளைக் குறிக்கும் வகையில், நேற்று பிரார்த்தனை நிகழ்ச்சி ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர்.
Credit: Splash
அந்த நிகழ்ச்சியில் மேட்லினுடைய தாய் தந்தையருடன், மேட்லினுடைய தங்கையான Amelieயும் கலந்துகொண்டாள். 16 ஆண்டுகளில் முதன்முறையாக Amelieயப் பார்க்கும்போது, மேட்லின் இப்போது இங்கு இருந்திருந்தால், இப்படித்தான் இருந்திருப்பாளோ என எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Credit: PA
விடயம் என்னவென்றால், தங்கள் மகள் இன்னமும் உயிருடன் இருக்கக்கூடும் என மேட்லினுடைய பெற்றோர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு விடயம், மேட்லின் மாயமாகி 16 ஆண்டுகள் ஆகியும் அவளைக் கடத்திய நபர் சிக்கவில்லை. சந்தேக நபர் ஒருவர் சிக்கிய நிலையில், அவர்தான் மேட்லினைக் கடத்தினார் என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: Splash