உள்ளாடையை கழற்றி வேலியில் தொங்கவிடும் பெண்கள்: வித்தியாசமான சுற்றுலா தளத்தின் பின்னணி?
நியூசிலாந்தில் உள்ள சுற்றுலா தளம் ஒன்றில், பெண்கள் தங்கள் மேல் உள்ளாடையை கழற்றி அங்குள்ள வேலிகளில் வீசுவதை வழக்கமாக கொண்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வித்தியாசமான சுற்றுலா தளம்
நியூசிலாந்தின் கார்ட்ரோனா(cardrona) என்ற பகுதியில் உள்ள சுற்றுலா தளத்தில் பெண்கள் தங்களுடைய உள்ளாடைகளை கழற்றி அங்குள்ள வேலிகளில் தொங்கவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள வேலிகளில் ஆயிரக்கணக்கான பிராக்கள் தொங்கவிடப்பட்டு இருப்பதால் இந்த பகுதியை மக்கள் ”கார்ட்ரோனா பிரா வேலி” என்றும் அழைக்கின்றனர்.
நியூசிலாந்து இணையதளம் ஒன்றில் கிடைத்துள்ள தகவலின்படி, 1998 கிறிஸ்துமஸ் மற்றும் 1999 புத்தாண்டுக்கு இடைப்பட்ட நாட்களில் இங்குள்ள வேலியில் நான்கு பிராக்கள் தொடங்கவிடப்பட்டு இருந்த நிலையில், இவை பல்வேறு விவாதங்களை அப்போது ஏற்படுத்தி இருந்தது.
இருப்பினும் பிப்ரவரி மாதத்தில் பிராக்களின் எண்ணிக்கை இங்கு 60-வதாக அதிகரித்தது, பின் நாட்கள் செல்ல செல்ல இது ஆயிரக்கணக்கில் பெருகி கொண்டே வருவதாக இணையதளம் தெரிவித்துள்ளது.
Cardrona Bra Fence
பிராக்கள் தொங்க விடுவதற்கான காரணம்
வேலியில் எதற்காக பிராக்கள் தொங்க விடப்படுகின்றன என்பதற்கு பல்வேறு கதைகளும், காரணங்களும் சொல்லப்படுகின்றன.
ஆனால் அதற்கான உண்மையான காரணம் யாருக்கும் உறுதியாக தெரியவில்லை, சொல்லப்போனால் காலத்திற்கு ஏற்ப இதன் காரணங்கள் மாறி மாறி சொல்லப்படுகிறது.
The Cardrona Bra Fence in New Zealand. Google it. pic.twitter.com/reIvkBxVL2
— Duchess of Healing (@sindivanzyl) January 13, 2018
முதலாவதாக சில பெண்கள் தங்களது சுதந்திரத்தை பிரகடனப்படுத்துவதற்காக பிராக்களை கழற்றி வேலியில் தொங்க விடுவதை புகைப்படமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
சிலர், பெண்களின் மார்பக புற்றுநோய் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.
அதற்கேற்ப இந்த பகுதியில் பெண்களின் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக நிவாரணமும் பெறப்படுகிறது.
La VALLA DE SUJETADORES (Bra Cardrona) de la carretera de Central Otago en Nueva Zelanda es una atracción turística que empezó a formarse en 1998.
— Nao Casanova (@NaoCasanova) September 2, 2021
Pero no es la única cosa que los neozelandeses cuelgan en masa en la vallas: cepillos de dientes, sandalias, ruedas, llantas, botas.. pic.twitter.com/SHHnSjg8Rl
மேலும் இந்த வேலி அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர்கள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வேலைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
வேறு சிலர், இங்கு பிராக்களை கழட்டி மாட்டி வைக்கும் பெண்களுக்கு பிடித்தமான வாழ்க்கை துணை கிடைப்பதாகவும் கூறுகின்றனர்.
இது போன்ற பல்வேறு காரணங்களால் இங்கு வரும் பெரும்பாலான பெண்கள் தங்கள் பிராக்களை கழற்றி வேலியில் தொங்கவிட்டு செல்கின்றனர்.
Cardrona Bra Fence
Cardrona Bra Fence