பிரித்தானியாவின் பழம்பெரும் பாடகர் 76 வயதில் காலமானார்
பிரித்தானியாவின் ஹெவி மெட்டல் ஜாம்பவான் ஜான் மைக்கேல் ஓஸி ஆஸ்போர்ன் தனது 76வது வயதில் காலமானார்.
ஜான் மைக்கேல் ஓஸி ஆஸ்போர்ன்
Black Sabbath ராக் பிராண்டின் பாடகர் ஜான் மைக்கேல் ஓஸி ஆஸ்போர்ன் (John Michael Ozzy Osbourne), ஹெவி மெட்டல் ஜாம்பவானாக விளங்கினார்.
பர்மிங்காமைச் சேர்ந்த இவர் 'Prince of Darkness' என்று அழைக்கப்பட்டார். சமீப காலமாக ஓஸி பல்வேறு நோய்களுடன் போராடி வந்தார்.
இந்த நிலையில் அவர் தனது 76 வயதில் காலமானார். அவரது இறப்பிற்கான காரணம் குறித்து அவரது குடும்பத்தினர் எந்தத் தகவலும் உறுதிப்படுத்தவில்லை.
மிகவும் சோகமானது
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,"எங்கள் அன்பான ஓஸி ஆஸ்போர்ன் இன்று காலை காலமானார் என்பதை வெறும் வார்த்தைகளால் தெரிவிக்க முடியாது என்பது மிகவும் சோகமானது. அவர் தனது குடும்பத்தினருடன் இருந்தார் மற்றும் அன்பால் சூழப்பட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளார்.
20 ஆண்டுகளாக இசையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஜான் மைக்கேல், மூன்று வாரங்களுக்கு முன்னதாக அதிகாரபூர்வமாக இசைக்குழுவில் இருந்து விலகினார்.
பின்னர் ஜூலை 5ஆம் திகதி இசைக்குழுவினருடன் அவர் இணைந்தார். அவருக்கு Black Sabbath சார்பில் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |