ஆயுள் காப்பீடு பெற கணவருக்கு விஷம்! சிக்கிய பிரித்தானிய பெண் பிரபலம்
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் பிரபலம் ஒருவர், தனது கணவரை கொல்ல முயன்றதற்காக கைது செய்யப்பட்டார்.
கணவர் விஷம்
பிரித்தானியாவைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் அமண்டா ஜெஃப்ரி (45).
இவர் ஸ்பெயின் நாட்டின் மஜோர்கா தீவில் தனது கணவர் விக்டருக்கு விஷம் கொடுத்ததாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளை எடுக்க அமண்டா தனது கணவருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அவரது கனவைரின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அமண்டா வியாழக்கிழமை மாலை பால்மாவில் உள்ள நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அங்கு தடை உத்தரவு பிறப்பித்து நீதிபதி அவரை விடுவித்தார்.
போதைப்பொருள்
ஸ்பெயினில் இதுபோன்ற உத்தரவுகள், பெரும்பாலும் விசாரணைக்கு உட்பட்ட நபர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபரிடம் இருந்து, 200 முதல் 500 மீற்றருக்குள் சென்று அவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தடுக்கின்றன.

இதற்கிடையில், விக்டர் தனக்கு தன் மனைவி போதைப்பொருள் கொடுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டிய தருணத்தை நினைவு கூர்ந்தார்.
அவர் அதிகாரிகளிடம், அவள் இரண்டு மது கிளாஸ்களை நிரப்பி, இதிலிருந்து குடி, என் கிளாஸ், இதில் இன்னும் நிறைய இருக்கிறது என்று என்னிடம் கூறினாள்.
பானத்தை ருசித்த பிறகு, அது மோசமாக சுவைப்பதாக அவர் புகார் அளித்ததாக ஸ்பானிஷ் செய்தி நிறுவனமான அல்டிமா ஹோரா தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |