பிரித்தானிய சுற்றுலாப் பயணியை மோசமாக தாக்கிய நபர்கள்: அதிர்ச்சி வீடியோ..என்ன நடந்தது?
பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் தாய்லாந்தில் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
பிரித்தானிய சுற்றுலாப் பயணி
தாய்லாந்தின் பட்டாயா கடற்கரை சுற்றுலாத் தலத்தில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் உள்ளூர் வாசிகளால் தாக்கப்பட்டார்.
அவரும், அவரது காதலியும் பணம் செலுத்தாமல் இரண்டு குளிர்பானங்களுடன் கடையில் இருந்து தப்பிச் செல்ல முயன்றாகக் கூறி, ஊழியர்கள் அவர்களை தாக்கியதாக கூறப்பட்டது.
ஆனால், குறித்த பிரித்தானியர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவர் இரண்டு தாய்லாந்து ஆண்களுடன் வாக்குவாதம் செய்வது போன்ற காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளன.
ஏன் என்னை அடிக்கிறீர்கள்?
அதில், 'ஏன் என்னை அடிக்கிறீர்கள்? நான் ஒன்றும் செய்யவில்லை. நண்பா, நீங்கள் எல்லோரும் தேவையில்லாமல் என்னை அடிக்கிறீர்கள். நான் ஏற்கனவே பணம் செலுத்திவிட்டேன்' என்று கேட்கிறார்.

அந்த ஜோடி தங்கள் மோட்டார் சைக்கிளையும் காலணிகளையும் கடையில் விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
அதே சமயம் பல உள்ளூர்வாசிகள், இந்த வன்முறையைக் கண்டித்து சுற்றுலாப் பயணிகளைத் தாக்குவதற்கு பதிலாக ஊழியர்கள் காவல்துறையை அழைத்திருக்க வேண்டும் என்று கூறினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |