சொகுசு கப்பலில் பிரித்தானிய பயணியின் சடலம்
கிரீட் தீவுப் பகுதியில் சொகுசு கப்பலில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அசைவற்ற நிலையில்
கிரீட் தீவுப் பகுதி வழியாக சென்ற சொகுசு கப்பலில், 79 வயதான நபர் ஒருவர் தளத்தில் அசைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது; மேலும் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் பிரித்தானிய சுற்றுலாப் பயணி என பின்னர் தெரிய வந்தது.
கிரேக்கத் தீவில் நிறுத்தப்பட வேண்டிய நிலை
இதுகுறித்து உள்ளூர் கடலோரக் காவல்படையினர், அந்த சொகுசு கப்பல் கிரீட் தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது; இதனால் அக்கப்பல் கிரேக்கத் தீவில் நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என தெரிவித்தனர்.
மேலும் The Chania Port கூறுகையில், "அந்த பிரித்தானியரின் மரணம் குறித்த முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. மேலும், அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.
அத்துடன் அந்நபர் சொகுசு கப்பலில் தனியாக பயணம் செய்தாரா அல்லது குடும்பத்துடன் சென்றாரா என்பது தற்போது தெளிவாக தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |