பிரித்தானிய இளைஞரை காணவில்லை! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள குடும்பத்தினர்
தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பிய பிரித்தானிய இளைஞர் காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காணாமல் போன பிரித்தானிய இளைஞர்
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விடுமுறையை முடித்துவிட்டு தாய்லாந்தில் இருந்து பிரித்தானியாவுக்கு திரும்பிய சைமன் ராபின்சன் (Simon Robinson) என்ற Lincolnshire பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் காணாமல் போயுள்ளார்.
அவர் கடைசியாக கடந்த 26ம் திகதி பாங்காக்கில் இருந்து ஹெல்சின்கி-க்கு விமானம் ஏறிய போது தொடர்பில் இருந்துள்ளார்.
அவர் பின்லாந்து தலைநகரில் இருந்து இணைப்பு விமானம் மூலம் மான்செஸ்டருக்கு வந்தடைய இருந்தார்.
இந்நிலையில், அவர் காணாமல் போயுள்ளார், இது தொடர்பாக அவரது சகோதரி சாரா ராபின்சன் டேல் பேசிய போது, சைமன் தாய்லாந்தில் இருந்து நிச்சயமாக விமானம் ஏறியதாகவும், ஆனால் பிரித்தானியாவுக்கு வரக்கூடிய இரண்டாவது விமானத்தில் ஏறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சைமன் ராபின்சனின் தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் சகோதரி சாரா தெரிவித்துள்ளார்.
தேடும் பணி தீவிரம்
காணாமல் போன சைமனை பின்லாந்தில் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சகோதரி சாரா, சைமன் ராபின்சன் காணாமல் போனது தொடர்பான போஸ்டர்களை முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, தகவல் உள்ளவர்கள் உடனடியாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரித்தானியாவில் உள்ளவர்கள் யாரேனும் சைமன் குறித்த தகவல் தெரிந்து இருந்தால் பொலிஸாரின் 101 மற்றும் பின்லாந்தின் ஹெல்சின்கி காவல்துறை அவசர அழைப்பு எண் +358 295 480 181 அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |