ரஷ்யாவுக்குள் நுழைய பிரித்தானிய அமைச்சர்களுக்குத் தடை
பிரித்தானிய அமைச்சர்கள் உட்பட 30 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாடு தடை விதித்துள்ளது.
ரஷ்யாவுக்குள் நுழைய தடை
பிரித்தானிய அமைச்சர்கள் Angela Rayner, Yvette Cooper மற்றும் Rachel Reeves உட்பட 20 அரசியல்வாதிகள் ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாடு தடை விதித்துள்ளது.
இதுபோக, வர்த்தகம், ராணுவம் மற்றும் ஊடகத்துறையை சேர்ந்த 10 பேர் என, மொத்தம் 30 பேருக்கு ரஷ்யாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பிரயோகிக்க பிரித்தானியா அனுமதித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையில் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா இந்த தடையை விதித்துள்ளது.
பிரித்தானிய அதிகாரிகள் தொடர்ச்சியாக ரஷ்யாவுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்து வருவதுடன், அந்நாடு நியோ நாஸி உக்ரைனுக்கும் கண்மூடித்தனமாக ஆதரவளித்துவருவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
சர்வதேச அரங்கில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை இழிவுபடுத்துதல், தனிமைப்படுத்துதல், ரஷ்யாவைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ரஷ்ய வெறுப்புக் கொள்கைகள், உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவு, என பல வகையிலும் பிரித்தானியா ரஷ்யாவுடன் நேரடி மோதல் போக்கை கடைப்பிடிப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகவேதான், பிரித்தானிய அரசியல்வாதிகள் முதலான 30 பேருக்கு ரஷ்யாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |