இளவரசர் வில்லியமுக்காக மன்னர் சார்லஸ் பதவி விலகவேண்டாம்: பிரித்தானிய மக்கள் விருப்பம்
மன்னர் சார்லசை பிரித்தானிய மக்கள் அங்கீகரித்துக்கொண்டுள்ளனர் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
சார்லஸ் நல்ல மன்னராக செயல்படுகிறார்
சன் பத்திரிகை நேற்று நடத்திய ஆய்வு ஒன்றில், 52 சதவிகிதம் பேர், மன்னர் சார்லஸ் ஒரு நல்ல மன்னராக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மன்னர் சார்லசே ஆட்சி செய்யட்டும். அவர் இளவரசர் வில்லியமுக்காக பதவியை விட்டு விலகவேண்டாம் என 55 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர்.
Credit: Getty
ஆனாலும், யார் ராஜ குடும்பத்திலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த நபர் என்ற கேள்விக்கு, 29 சதவிகிதம்பேர் இளவரசி கேட் என்றும், 19 சதவிகிதம் பேர் இளவரசர் வில்லியம் என்றும், 7 சதவிகிதம் பேர் மட்டுமே மன்னர் சார்லஸ் என்றும் கூறியுள்ளனர்.
Town & Country Magazine
கமீலாவைப் பிடிக்கும் என்று கூறியவர்கள், 1 சதவிகிதத்தினர் மட்டுமே!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |