உக்ரைனுக்கு சிறப்பு படைகளை அனுப்பிய பிரித்தானியா! போட்டுடைத்த உக்ரேனிய தளபதி
உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சியளிக்க பிரித்தானியா சிறப்பு வான் சேவை துருப்புகள் கீவ் நகருக்கு வந்ததாக அந்நாட்டு தளபதி தெரிவித்துள்ளார்.
2014ல் கிரிமியா ஆக்கிரமிப்புக்கு பிறகு உக்ரைனுக்கு முதல் ராணுவ பயிற்சியாளர்களை பிரித்தானியா அனுப்பியது.
ஆனால், ரஷ்யா உடனான நேரடி போருக்கான சாத்தியத்தை தவிர்ப்பதற்கு, பிப்ரவரி மாதம் தங்கள் படைகளை உக்ரைனிலிருந்து வெளியேற்றியதாக பிரித்தானியா அறிவித்தது.
இந்நிலையில், பிரித்தானியாவால் வழங்கப்பட்ட சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கையாள ஒரு முக்கியமான பயிற்சி அளிப்பதற்காக பிரிட்டிஷ் சிறப்புப் படைகள் கீவ் வந்ததாக உக்ரேனிய தளபதிகள் தெரிவித்துள்ளனர்.
கீவ் நகரின் வடக்கில் உள்ள Obolon-ல் இருக்கும் உக்ரேனிய படைப்பிரிவின் தளபதி Yuriy Myronenko கூறியதாவது, டேங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கையாளவதற்கான பயிற்சி மீண்டும் தொடங்கியது.
மொத்த சம்பளத்தையும் விவசாயிகளின் மகள்களுக்கு அளிக்கிறேன்! ஹர்பஜன் சிங் அறிவிப்பு
டேங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கையாள எந்தவித முன் அனுப்பவமும் இல்லாத புதிததாக சேர்க்கப்பட்ட வீரர்கள் மற்றும் மீண்டும் பணிக்கு திரும்பிய முன்னாள் வீரர்களுக்கு இது முக்கிய தேவையாக இருந்தது.
பிரித்தானியாவிடமிருந்து பெரியளவில் ராணுவ உதவிகளை பெற்றுள்ளோம். ஆனால், NLAW பயன்படுத்த தெரிந்த வீரர்கள் வேறு இடங்களில் இருக்கின்றனர்.
எனவே, யூடியூப்பில் வீடியோவை பார்த்து நாங்களே கற்றுக்கொண்டோம். 7 நிமிடங்களில் NLAW எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம்.
அதற்கு பின் நாங்கள் சிறப்பாக பயிற்சி பெற்றோம். இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரித்தானியா அதிகாரிகள் எங்கள் படைக்கு வந்திருந்தனர், அவர்கள் எங்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்தனர்.
அதன் காரணமாக எங்களுக்கு தற்போது வெற்றி மற்றும் தன்னப்பிக்கை கிடைத்துள்ளது என உக்ரேனிய படைப்பிரிவின் தளபதி Yuriy Myronenko தெரிவித்துள்ளார்.