வெளிநாடொன்றில் உயிரிழந்த பிரித்தானிய இளம் பெண்: பெற்றோர் எடுத்த மிகப்பெரிய முடிவு
பிரித்தானிய இளம்பெண் ஒருவர் வியட்நாமில் சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்து
வியட்நாம் நாட்டின் வடக்கு பகுதியில் நடந்த சாலை விபத்து ஒன்றில் 19 வயது இளம் பிரித்தானிய சுற்றுலா பயணி ஒர்லா வேட்ஸ்(Orla Wates) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சீனாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஹா ஜியாங் லூப் என்ற பிரபலமான சுற்றுலா பாதையில் ஏற்பட்ட விபத்தில் ஒர்லா வேட்ஸ் உயிரிழந்துள்ளார்.
விபத்தை தொடர்ந்து ஒர்லா வேட்ஸ் உடனடியாக ஹனோயில் உள்ள வியட் டக் பிர்ண்ட்ஷிப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஒர்லா வேட்ஸ் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை பிரித்தானிய வெளியுறவு துறை தொடர்ந்து செய்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒர்லா வேட்ஸின் பெற்றோர் தங்கள் மகளை இழந்த வருத்தத்திற்கு மத்தியிலும், ஒர்லா வேட்ஸின் உடல் உறுப்புகளை தியானம் செய்ய முன்வந்துள்ளனர்.
இது தொடர்பாக அவரின் தாய் ஹென்ஹிட் வேட்ஸ் பேசிய போது, ஒர்லா வேட்ஸ் உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்களின் உடல்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது தங்களுக்கு ஆறுதல் தருவதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |