மகளின் பிறந்தநாளை கொண்டாட இலங்கை வந்த பிரித்தானியர்: இறுதியில் நிகழ்ந்த சோகம்
இலங்கையில் பிரித்தானியர் ஒருவர் மலையில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளுக்காக இலங்கை வந்த பிரித்தானியர்
தனது மகளின் 34வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கான இலங்கைக்கு வந்த பிரித்தானியர் மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸார் வெளியிட்ட தகவலில், பிரித்தானியாவின் Oak Path பகுதியை சேர்ந்த 63 வயது பிரட் மெக்லீன் என்ற சுற்றுலா பயணி மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16ம் திகதி தன்னுடைய மகள் நடாலியின் 34வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பிரட் மெக்லீன் இலங்கைக்கு வந்துள்ளார்.
மலையில் இருந்து விழுந்து உயிரிழந்த தந்தை
தந்தையும் மகளும் மாத்தறையில் உள்ள வெலிகம பகுதிக்குச் சென்று, பின்னர் 23 ஆம் திகதி எல்ல நகரத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது மகளுடன் சேர்ந்து எல்ல மலைப் பகுதிகளை பார்வையிட சென்ற போது திடீரென மலை உச்சியில் இருந்து விழுந்துள்ளார்.
பிரட் மெக்லீன் உடனடியாக மீட்கப்பட்டு பண்டாரவலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பண்டாரவளை நீதவான் கெமுனு சந்திரசேகர எல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |