காசாவில் மஞ்சள் கோட்டை நெருங்கிய பாலஸ்தீனியர்கள்: துப்பாக்கி சூடு நடத்திய இஸ்ரேல்!
காசாவில் சண்டை நிறுத்தத்திற்கு மத்தியில் ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மஞ்சள் கோட்டிற்கு அருகே மோதல்
திங்கட்கிழமை காசா பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட மஞ்சள் கோடு பகுதியை பாலஸ்தீன குழு ஒன்று கடக்க முயன்றதால் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன படைகளை பிரிக்கும் புள்ளியாக இந்த மஞ்சள் கோடு இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
IDF வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியான அறிக்கையில், பாலஸ்தீன பயங்கரவாத செயல்பாட்டாளர்கள் நிலத்தை தோண்டிக் கொண்டும், கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலிய படைகளை நோக்கி நகர்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தலை முறியடிக்கும் விதமாகவே தாக்குதல் நடத்தப்பட்டதாக IDF தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 2 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக பாலஸ்தீன ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் தொடரும் நிலையில் இந்த மோதலானது அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |