பள்ளத்தாக்கில் கவிழ்ந்த சுற்றுலா பயணிகள் பேருந்து: 27 பிரித்தானியர்களின் நிலை என்ன?
ஸ்பெயினில் சுற்றுலா பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்த விபத்தில் பிரித்தானியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுற்றுலா பேருந்து விபத்து
ஸ்பெயினின் கனேரி தீவுகளில்(Canary Islands) பிரித்தானிய சுற்றுலா பயணிகளுடன் சென்ற பேருந்து லா கோமேரா பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 22 வயது பிரித்தானிய முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்து சம்பவத்தில் 27 பயணிகள் வரை படுகாயமடைந்துள்ளனர்.
GM2 நெடுஞ்சாலையில் இந்த கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1.15 மணிக்கு சுற்றுலா பயணிகளை படகு சவாரிக்கு அழைத்துச் சென்ற பேருந்து செங்குத்து வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் பாய்ந்தது.

உயிர் தப்பிய குழந்தைகள்
விபத்தின் போது சாரதி உட்பட மொத்தம் 28 பேர் பேருந்தில் இருந்துள்ளனர். இதில் 24 பெரியவர்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 27 பேரும் பிரித்தானிய குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 4 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அவசர சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் டெனெரிஃப் தீவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
லேசான காயமடைந்த 23 பேர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானிய வெளியுறவு துறை செயலாளர் யவெட் கூப்பர் இந்த விபத்து சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |