உக்ரைனில் கொல்லப்பட்ட பிரித்தானிய மருத்துவர்: உடலை தாய்நாட்டிற்கு கொண்டுவருவதில் சிரமம்
உக்ரைன் போரில் தன்னார்வ மருத்துவர் கிரேக் மெக்கிண்டோஷ் கொல்லப்பட்டார்.
உடலை பிரித்தானியாவிற்கு கொண்டு வருவதற்கு சுமார் 4,000 பவுண்டுகள் செலவாகும்.
உக்ரைன் போரில் தன்னார்வ மருத்துவராக பணியாற்றிய பிரித்தானிய மருத்துவர் கிரேக் மெக்கிண்டோஷ் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் நடவடிக்கையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக தங்களை உட்படுத்தி கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் தன்னார்வ மருத்துவராக பணியாற்ற உக்ரைனுக்கு சென்ற மருத்துவர் கிரேக் மெக்கிண்டோஷ், நடைபெறும் போர் நடவடிக்கையில் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரேக் மெக்கிண்டோஷ் உடலை பிரித்தானியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் GoFundMe அமைப்பு ஆகஸ்ட் 24ம் திகதி மெக்கிண்டோஷ் உயிரிழந்த தகவலை வெளியிப்படுத்தியது.
இதுத் தொடர்பாக கிரேக் மெக்கிண்டோஷின் சகோதரி லோர்னா தெரிவித்த கருத்தில், மெக்கிண்டோஷ் கடமையின் முன்வரிசையில் தனது உயிரை இழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கிரேக் மெக்கிண்டோஷ் தைரியமாக போர் பாதிக்கப்பட்ட நாட்டில் உயிர்களைக் காப்பாற்ற மருத்துவராக உக்ரைனுக்கு செல்ல முன்வந்தார். அத்துடன் கிரேக் தனது கடமையின் போது மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அவர் தனது உயிரை இழந்துள்ளார்.
இந்த தன்னலமற்ற மனிதரின் உடல் தற்போது உக்ரைனில் உள்ள பிணவறையில் சிக்கித் தவிக்கிறது, அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல எந்த உதவியும் இல்லை, அவரது உடலை பிரித்தானியா கொண்டு வர சுமார் 4,000 பவுண்டுகள் செலவாகும் எனத் தெரிவித்தார்.
கிரேக் மெக்கிண்டோஷ் உடலை பிரித்தானியா கொண்டு வருவதற்கு நிதி திரட்டி வரும் GoFundMe புதன்கிழமை மாலை நிலவரப்படி £4,590 பவுண்ட்கள் திரட்டியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: கனடாவில் ஒன்றரை வயது குழந்தை சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: 3 பொலிஸார் மீது குற்றச்சாட்டு
இது தொடர்பாக FCDO செய்தித் தொடர்பாளர் PA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த கருத்தில், உக்ரைனில் உயிரிழந்த பிரித்தானிய நபர் குடும்பத்தை ஆதரிக்கிறோம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.