மனிதாபிமான உதவிகளை செய்ய சென்ற...பிரித்தானியர்களை சிறைப்பிடித்த ரஷ்ய ராணுவம்
ரஷ்யா உக்ரைன் போரில் மனிதாபிமான உதவிகள் செய்ய சென்ற இரண்டு பிரித்தானியர்களை ரஷ்ய ராணுவம் சிறைப்பிடித்து வைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரானது முன்றாவது மாதத்தை தொட்டு இருக்கும் நிலையில், இந்த போரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொலை செய்யப்பட்டும் படுகாயமடைந்து பெரும் அவதி அடைந்து வருகின்றன.
கிட்டதட்ட 5.4 மில்லியன் மக்கள் பொதுமக்கள் ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைக்கு அஞ்சி உக்ரைன் நாட்டை விட்டும், சுமார் 7.7 மில்லியன் மக்கள் உக்ரைனிற்குள்ளேயே இடம்பெயரந்தும் இருப்பதாக ஐ.நாவின் மனித உரிமை ஆணையம் அறிக்கை தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு உதவுவதற்காக தங்களது மனிதாபிமான குழுக்களை தொடர்ந்து அனுப்பிவைத்து வருகிறது.
அந்தவகையில், பிரித்தானியாவின் தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற Presidium Network என்ற மனிதாபிமான தொண்டு நிறுவனம், உக்ரைனில் மனிதாபிமான உதவிகளை செய்வதற்காக சென்ற Paul Urey மற்றும் Dylan Healy என்ற இரண்டு பிரித்தானியர்களை ரஷ்ய ராணுவம் சிறைப்பிடித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
சிறைப்பிடிக்கபட்ட இந்த இரண்டு பிரித்தானிய தொண்டு ஊழியர்களும் கடந்த திங்கள்கிழமை உக்ரைனின் தெற்குப் பகுதி நகரான ஜபோரிஜியாவில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள சோதனைசாவடியில் வைத்து சிறைப்பிடிக்க பட்டதாக தெரிவித்துள்ளது.
பிரித்தானியர்களின் இந்த சிறைப்பிடிப்பு நடவடிக்கை குறித்து வெளியுறவுத் துறை விரைவாக தகவல் சேகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: மன வேதனை மற்றும் வலிகளின் மையம் உக்ரைன்: தலைநகர் கீவ்-வை தாக்கிய ஏவுகணை!
மேலும், ரஷ்ய ராணுவத்தின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், உக்ரைனுக்கு ஆதரவாகவும் ராணுவ நடவடிக்கையில் இறங்கிய பிரித்தானியர்களில் ஒருவர் நேற்று உயிரிழந்து இருப்பதையும், ஒருவர் காணாமல் போகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.