மன வேதனை மற்றும் வலிகளின் மையம் உக்ரைன்: தலைநகர் கீவ்-வை தாக்கிய ஏவுகணை!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்த ஒருமணி நேரத்திற்கு உள்ளாக, தலைநகர் கீவ்-வில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் அப்பகுதிக்குள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் உள்ள இரும்பு ஆலைக்குள் சிக்கி இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கதில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres)ஈடுபட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில், இரண்டு தினங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடினை தலைநகர் மாஸ்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை தொடர்ந்து, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியையும் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ”உக்ரைன் தாங்க முடியாத மன வேதனை மற்றும் வலிகளின் மையமாக மாறிவிட்டது” என தெரிவித்தார்.
இந்த நிலையில் சில வாரங்களாக ரஷ்ய ராணுவத்தின் வான் தாக்குதலில் பாதிக்கப்படாமல் இருந்த உக்ரைன் தலைநகர் கீவ்-வில் ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதல் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இருவரும் செய்தியாளர்களை சந்தித்த சில மணி நேரத்திற்கு பிறகு நடைப்பெற்றுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்து இருப்பதாகவும் உக்ரைன் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த தாக்குதல் அமைதி பேச்சுவார்த்தையில் விருப்பம் இல்லாததை காட்டுவதாக தெரிகிறது என உலக நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.