பிரித்தானிய பெண்ணை பன்றி வேட்டையின் போது கொன்ற சக தோழர்: பிரான்சில் அரங்கேறிய சோகம்!
பன்றி வேட்டையில் நண்பரால் இதயத்துக்கு மேலே சுடப்பட்ட பிரித்தானிய பெண்.
சூழ்நிலைகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதால் நண்பரை பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
பிரான்ஸின் வடமேற்கு பகுதியில் பன்றி வேட்டையில் ஈடுபட்டு வந்த 67 வயதான பிரித்தானிய பெண்மணி சக தோழர் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸின் பிரிட்டானியில்(Brittany) உள்ள கவுட்லின் (Goudelin) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பன்றி வேட்டையில், உயிரிழந்த பிரித்தானிய பெண்ணும், அவரது நெருங்கிய நண்பரும் கலந்து கொண்டுள்ளனர்.
வேட்டைக் குழுவினர் சோள வயல் ஒன்றை கடந்து கொண்டு இருக்கும் போது, 67 வயதுடைய பிரித்தானிய பெண் இதயத்திற்கு மேலே தனது தோழரால் சுடப்பட்டார் என Le Télégramme செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
உடனடியாக Saint-Brieuc இல் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக பிரித்தானிய பெண் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மதியம் 12:20 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
துப்பாக்கி சூடு நடந்ததற்கான சூழ்நிலை இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், 69 வயதுடைய ஆண் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவத்தின் சரியான சூழ்நிலைகள் இன்னும் நிறுவப்படவில்லை என்றாலும், 69 வயதுடைய உயிரிழந்த பிரித்தானிய பெண்ணின் தோழர் மது அல்லது போதை பொருளை உட்கொள்ளவில்லை என்ற ஆரம்ப சோதனைகள் தெரிவிக்கின்றன.
AFP/Getty Images
மேலும் கொலை விசாரணையின் பகுதியாக அவர் பொலிஸார் காவலில் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பிரேதப் பரிசோதனை புதன்கிழமை நடைபெற உள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: “வா, வா, வா விராட்” ஆடுகளத்தில் கோலியிடம் தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக்: ரசிக்க வைக்கும் வீடியோ ஆதாரம்!
பிரித்தானியாவின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட கருத்தில், பிரான்சில் இறந்த பிரித்தானிய பெண்ணின் குடும்பத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.