“வா, வா, வா விராட்” ஆடுகளத்தில் கோலியிடம் தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக்: ரசிக்க வைக்கும் வீடியோ ஆதாரம்!
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக்.
விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் “வா, வா, வா விராட்” என்று ஆடுகளத்தில் தமிழில் கோலிக்கு அழைப்பு.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் ஆடுகளத்தில் விராட் கோலியை தமிழில் அழைத்து, பந்தை பவுன்ஸ் செய்து தரும்படி கேட்கும் வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.
இந்திய அணியில் விக்கெட் கீப்பர் கேப்டனாக தோனி இருந்த போது, பந்துவீச்சாளர்களிடம் இந்தி மொழியில் பேசி எத்தகைய பந்தை வீச வேண்டும் என்ற அறிவுரை வழங்கி வருவார், இதனால் இந்திய மொழிகள் தெரியாத வெளிநாட்டு வீரர்கள் அடுத்து எத்தகைய பந்தை எதிர் கொள்ள போகிறோம் என்ற சமிகைகள் எதுவும் கிடைக்காமலே பந்தை எதிர்கொள்வார்கள்.
Dinesh Karthik & Ashwin... Today's warm up match ?
— HeathLedger ❤️ VFC (@vaithees2VFC) October 17, 2022
Vaa vaaa Virat ??@DineshKarthik @ashwinravi99#TeamIndia #T20WorldCup pic.twitter.com/ARwbi2V8it
தோனியின் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சக வீரர்களிடம் தமிழில் பேசி, எதிரணி வீரர்களுக்கு பிடிபடாத வண்ணம் விவரங்களை பரிமாறிக் கொள்வதை சமீபத்திய காலங்களில் செய்து வருகிறார்.
அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் தொடங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னாத நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில் நேற்று இந்திய அணி, அவுஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.
DK asking VK to come forward in Tamil and asks him to give it on the bounce
— Cricket Videos (@KarthiKalls) October 17, 2022
Va va va va Virat !!!
Gavaskar Sir finding it hard to understand Tamil ?#TeamIndia pic.twitter.com/kNPpQRhuHz
இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட தினேஷ் கார்த்திக், மறுமுனையில் பந்துவீச வந்த தமிழக வீரர் அஸ்வினிடம், பேட்ஸ்மேன் ஸ்மித்தை குறிப்பிட்டு “இப்போது தான் களத்தில் இறங்கியுள்ளான், சிறிது நேரம் களத்தில் இருக்கட்டும், நீ சாதாரண பந்தையே வீசு” என்று தமிழில் பேசி பந்து வீசும் முறையை எடுத்துக் கூறினார்.
கூடுதல் செய்திகளுக்கு: இளவரசர் லூயிஸை வயிற்றில் சுமந்து கொண்டு இளவரசி கேட் மிடில்டன் செய்த காரியம்: வைரல் வீடியோ காட்சி!
மேலும் வீசப்பட்ட பந்து அவுஸ்திரேலிய வீரர் ஸ்மித்-தால் விரட்டியடிக்கப்பட்டு விராட் கோலியிடம் செல்லவே, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், விராட் கோலியிடம் “வா, வா, வா, விராட், பந்தை பவுன்ஸ் செய்து தா’ என்று தமிழில் கேட்கும் வீடியோ இணையத்தில் பரவி கிரிக்கெட் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
Reuters