இளவரசர் லூயிஸை வயிற்றில் சுமந்து கொண்டு இளவரசி கேட் மிடில்டன் செய்த காரியம்: வைரல் வீடியோ காட்சி!
இளவரசி கேட் மிடில்டன், பேடிங்டர் பியர் எனும் படத்தில் வரும் கரடி பொம்மை நடனமாடும் வீடியோ.
கைதட்டி நடனத்தை பாராட்டிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி.
இளவரசி கேட் மிடில்டன், பேடிங்டர் பியர் எனும் படத்தில் வரும் கரடி பொம்மையுடன் நடனமாடும் ஆச்சரியமூட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி ராயல் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மன்னர் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்று கொண்டதை அடுத்து, அவரது மூத்த மகன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் இருவரும் வேல்ஸின் புதிய இளவரசர் மற்றும் இளவரசியாக அறிவிக்கப்பட்டனர்.
மன்னர் சார்லஸின் முதல் மனைவி டயானா இறப்பதற்கு முன்பு வரை அவரது நடத்தைகளால் பொதுவெளிகளில் அதிகமாக கவனம் பெற்று வந்தார், ஆனால் அவரது மரணத்திற்கு பிறகு தற்போது இளவரசர் வில்லியமின் மனைவி இளவரசி கேட் மிடில்டன் (kate middleton) தனது நடத்தைகளால் பொதுமக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு (அக்டோபர் 16, 2017) ரயில் நிலையத்தில் பேடிங்டர் பியர் எனும் படத்தில் வரும் கரடி பொம்மையுடன் இளவரசி கேட் மிடில்டன் நடனமாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரியுடன் நின்று கொண்டு இருக்கும் இளவரசி கேட் மிடில்டனிடம், பேடிங்டர் (paddington) பியர் எனும் படத்தில் வரும் கரடி பொம்மை நடனமாட அழைத்ததை தொடர்ந்து, இருவரும் மகிழ்ச்சியுடன் நடனமாடினர்.
Five years ago (on October 16th 2017), Catherine was seen dancing with Paddington as she was two months pregnant with Prince Louis ???? pic.twitter.com/uXvapMWzJk
— Theroyalfamily.wcgcl ? (@lovewalesfamily) October 16, 2022
அப்போது அருகில் இருந்த இளவரசர் வில்லியமும்(prince william), இளவரசர் ஹரியும் (prince harry) கைதட்டி சிரித்து மகிழ்ந்தனர் மற்றும் இருவரின் நடனத்தையும் புன்னகையுடன் பாராட்டினர்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் மீதான தாக்குதலில் களமிறங்கிய ஈரான்: ஆதாரங்களை திரட்டும் ஐரோப்பிய ஒன்றியம்
இவற்றில் கவனிக்கதக்க விஷயம் என்னவென்றால், பேடிங்டர் பியர் எனும் படத்தில் வரும் கரடி பொம்மையுடன் இளவரசி கேட் நடனமாடும் போது இளவரசர் லூயிஸை இரண்டு மாத கருவாக தனது வயிற்றில் சுமந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.