8 மாதக் குழந்தைக்கு போதைப்பொருள்! பிரித்தானிய தாய் அதிரடி கைது
ஸ்பெயினில் தனது எட்டு மாதக் குழந்தைக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய பெண் கைது செய்யப்பட்டார்.
நெருப்பு மூட்டியதாக
பிரித்தானியாவைச் சேர்ந்த 25 வயது பெண்ணொருவர், தனது 43 வயது காதலருடன் ஸ்பெயினின் Costa del Sol கடற்கரையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவர்கள் ஒரு பெரிய மரத்தின் கீழ் நெருப்பு மூட்டியதாக வந்த தகவலைத் தொடர்ந்து, பொலிஸார் அவர்களை கைது செய்ய நிலையில் 8 மாதக் குழந்தையையும் மீட்டதாக கூறப்படுகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு இருக்கலாம் என
பின்னர் அந்த குழந்தையின் நிலைமையைப் பார்த்தபோது, அதற்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
எனவே, குழந்தையை பரிசோதனைக்காக உள்ளூர் சுகாதார மையத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதிக்கப்பட்ட பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது குழந்தைக்கு ஏற்ற எடை குறைவாக இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், சிறுநீர் பரிசோதனை செய்தபோது கோகோயின் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் குறித்த பெண்ணும், அவரது காதலரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட உள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |