பேரனுடன் மலையில் இருந்து விழுந்த பிரித்தானிய பெண்...பொலிஸார் தீவிர விசாரணை
பெனிடோர்மில் உள்ள குன்றில் ஏற்பட்ட விபத்தில் 58 வயதான பெண் உயிரிழப்பு.
விபத்திற்கான காரணங்களை கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணை
பிரித்தானியாவின் பெனிடோர்மில் உள்ள குன்றில் ஏற்பட்ட விபத்தில் 58 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது பேரன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் பெனிடோர்மில் உள்ள செர்ரா கெலாடா இயற்கை பூங்காவில் குன்றின் விளிம்பில் ஸ்கூட்டர் வகையான மின்சார வாகனத்தை ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 58 வயதான பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என ஸ்பானிய செய்தித்தாள் El Periodico தெரிவித்துள்ளது.
மேலும் அவரது எட்டு வயது பேரனுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடினமான மலைப் பகுதியில் வாகனம் குன்றின் மீது விழும் முன் ஏன் சாலையில் சென்றது என்பது தெளிவாக தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் விபத்துக்கான காரணங்கள் மற்றும் வாகனம் அனைத்து தேவைகளுக்கும் இணங்குகிறதா என்பதை தெளிவுபடுத்துவதற்காக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விபத்திற்குள்ளான பெண் சரிவில் இறங்குவதைப் பார்த்த அவருடைய தோழி, அவளிடம் செல்ல முற்பட்ட போது அவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: அதிகரிக்கும் வாழ்க்கை செலவு நெருக்கடி...ஓய்வூதியகாரர்களுக்கு £30 மதிப்பிலான உணவு வவுச்சர்கள் அறிவிப்பு
இதுத் தொடர்பாக வெளிநாட்டு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலக செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், ஸ்பெயினில் இறந்த பிரித்தானிய பெண்ணின் குடும்பத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.