போர்ச்சுகலில் பிரிட்டிஷ் மூதாட்டி மரணம்: புரட்டிப் போட்ட கிளாடியா புயல்
மோசமான வானிலை காரணமாக போர்ச்சுகலில் 85 வயது பிரித்தானிய மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
85 வயது மூதாட்டி உயிரிழப்பு
தீவிர காற்று நிகழ்வு காரணமாக போர்ச்சுகலின் அல்கார்வே பிராந்தியத்தில் உள்ள அல்புஃபெய்ராவில் உள்ள விடுமுறை முகாமில் 85 வயது பிரித்தானிய மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
முகாமில் காலை 10.00 மணியளவில் பலத்த காற்று வீசியதை அடுத்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 85 வயது மூதாட்டி பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

போர்ச்சுகல் நாட்டின் SIC நிறுவனம் இந்த கிளாடியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தீவிர காற்று நிகழ்வை(புயல்) அடையாளம் கண்டுள்ளது.
இதன் தாக்கத்தால் 85 வயது மூதாட்டி உயிரிழந்து இருப்பதுடன் டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
கிளாடியா புயலில் பாதிக்கப்பட்டவர்கள் 6 முதல் 85 வயதுடைய போர்த்துகீசிய, ஸ்பானிஷ் மற்றும் பிரிட்டிஷ் நாட்டவர்கள் என்று அல்கார்வே பிராந்திய தளபதி விட்டோர் வாஸ் பின்டோ தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்தவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |