பிரான்சில் பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வன்புணர்வு செய்த காவலர் கைது
பிரித்தானிய பெண்ணொருவர் பிரான்சில் பொலிஸ் அதிகாரியால் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரித்தானிய பெண்
பிரான்சின் Aubagne நகரில் கடந்த வாரம் பிரித்தானிய பெண்ணொருவரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது குறித்த பெண் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு பொலிஸ் வாகனத்தின் பின்புறத்தில் வைத்து அவர்களில் ஒரு காவலர் வன்புணர்வு செய்துள்ளார்.
மறுநாள் குறித்த பெண் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அதன் பின்னர் விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று மூன்று பொலிஸாரும் கைது செய்யப்பட்டனர்.
குற்றத்தை தடுக்க தவறியதாக
தங்கள் பதவியால் வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பெண்ணொருவரை வன்புணர்வு செய்ததாக காவல் அதிகாரிக்கு மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்த இரண்டாவது அதிகாரி மீது 'வேண்டுமென்றே குற்றத்தை தடுக்க தவறியதாக' குற்றம்சாட்டப்பட்டு, நீதித்துறை மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட்டார்.
அதே சமயம் மூன்றாவது அதிகாரி உதவி சாட்சி இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் சுற்றுலாப் பயணியா அல்லது பிரான்சில் வசிக்கிறாரா என்பது தெளிவாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |