ரஷ்யா-பெலாரஸ் கூட்டுப் பயிற்சி: அணு ஆயுத அச்சுறுத்தலுடன் NATO-விற்கு எச்சரிக்கை
ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து நடத்திய Zapad 2025 எனும் பெரும் இராணுவ பயிற்சி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த பயிற்சியில் அணு ஆயுத திறனுடைய போர் விமானங்கள், போர் கப்பல்கள், ஆயிரக்கணக்கான படைவீரர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான போர் வாகனங்கள் ஈடுபதப்பட்டடன.
ரஷ்யாவின் புதிய Oreshnik ஏவுகணைகள், அணு ஆயுத தாக்குதலுக்கான திட்டமிடலிலும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பயிற்சி NATO உறுப்பினர்களான போலந்து, லாட்வியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளுக்கு அருகில் நடைபெறத்தால், அந்த நாடுகளில் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், Oreshnik ஏவுகணைகள் Mach 10 வேகத்தில் பாயும் என்றும், அணு ஆயுத தாக்குதலுக்கு இணையான சேதத்தை ஏற்படுத்தும் என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணைகள் விரைவில் பெலாரஸில் நிலைநிறுத்தப்படவுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia Belarus Zapad-2025, Russia Belarus joint military drills, Russia raising tensions with NATO, Russia NATO tensions