போருக்குத் தப்பி பிரித்தானியா வந்த பெண் உக்ரைன் பயணம்: பின்னணியில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து உயிர் தப்ப பிரித்தானியாவுக்கு வந்த பெண், ஒருவர் காரிலேயே மீண்டும் உக்ரைன் சென்றுள்ளார்.
அவர் தன் உயிரைக் காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார் அவரது காதலர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து உயிர் தப்ப பிரித்தானியாவுக்கு வந்த ஒரு பெண், லண்டனிலிருந்து உக்ரைனுக்கு காரிலேயே மீண்டும் சென்றுள்ளார்.
சட்டத்தரணியும் நடிகையுமான ஜூலியா (Julia Drozdova, 32), ஜூன் மாதம் 6ஆம் திகதி தனது காதலரைப் பிரிந்து தன் தாயை அழைத்துக்கொண்டு ஜேர்மனி புறப்பட்டார். தாயை ஜேர்மனியில் குடியமரச் செய்துவிட்டு, ஆகத்து மாதம் 2ஆம் திகதி லண்டனிலுள்ள Lewisham என்ற இடத்தை வந்தடைந்தார் ஜூலியா.
Image: Julia Drozdova
இவ்வளவு நாள் போர் எப்போது முடியும் என்று காத்திருந்தேன். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இதுதான் இப்போது நமது புதிய வாழ்க்கை என்று முடிவாகிவிட்டதால், நம்மை நாம்தான் காப்பாற்றவேண்டும் என்று கூறும் ஜூலியா, நாட்டுக்காக தனது கடமையைச் செய்ய புறப்பட்டுவிட்டார்.
ஆம், தன் தாய்நாட்டுக்காக போராடும் வீரர்களுக்காக உணவு, தூங்குவதற்கான பைகள், உடைகள் முதலானவற்றை வழங்குவதற்காக உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுவிட்டார் ஜூலியா.
Image: Julia Drozdova
ஜூலியாவின் பயணத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, தன் தாய்நாட்டு வீரர்களுக்கு உதவுவதுடன், தான் நான்கு மாதங்களுக்கு முன் விட்டுப் பிரிந்து வந்த தன் காதலரான Sergeiயையும் சந்திப்பதும் ஜூலியாவின் திட்டம்.
ஆக, திட்டப்படி தன் காதலரை அவர் சந்தித்து, இருவருமாக ஒன்றாக அமர்ந்து காபி அருந்திக்கொண்டிருக்கும்போதுதான் புடின் கிரீமியா பாலம் தகர்க்கபட்ட கோபத்தைக் காட்ட கீவ் நகர் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தினார்.
ஜூலியா மட்டும் வரவில்லை என்றால், Sergei கீவ்வுக்கு பணிக்காக சென்றிருப்பார். எனவே, ஜூலியாதான் என் உயிரைக் காப்பாற்றினார் என்கிறார் Sergei காதலும் நெகிழ்ச்சியுமாக...
Image: Julia Drozdova