ராணி மறைவிற்கு பின் பிரித்தானியாவில் அதிகம் விற்பனையாகும் ஒரு பொருள்! மகாராணிக்கு மிகவும் பிடித்தது
ராணியாரின் விருப்பமான மலரான வெள்ளை அல்லியை அதிகம் வாங்கும் பிரித்தானியர்கள்.
எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்த அதிகரிக்கும் மலர் விற்பனை.
பிரித்தானியாவில் ராணியின் மறைவையடுத்து மலர்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துள்ளது. ராணிக்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்த பிரித்தானியர்கள் தொடர்ந்து மலர்களை வாங்வதன் காரணமாகவே விற்பனை அதிகமாகியுள்ளது.
வியாழக்கிழமை காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் பிற அரச இல்லங்களுக்கு வெளியே ஏற்கனவே அட்டைகள், பூக்கள் மற்றும் பொம்மைகளை வைத்து வருகின்றனர்.
ராணி காலமானதை தொடர்ந்து மலர் விற்பனை பரபரப்பாக நடக்கிறது என விற்பனையாளரான ஆல்பர்ட் டீன் கூறுகிறார்.
AFP
மேலும் மக்கள் நிறைய ரோஜா மற்றும் கிரிஸாந்தமம்கள் பூக்களை வாங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் பூக்கடை சங்கம் தெரிவிக்கையில், ராணியாரின் விருப்பமான மலரான வெள்ளை அல்லிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் தேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1997ல் டயானா இறந்த பிறகு, பக்கிங்ஹாம் மற்றும் கென்சிங்டன் அரண்மனைகளில் கிட்டத்தட்ட 60 மில்லியன் பூங்கொத்துகள் மொத்தமாக இருந்தன.
அது போல ராணியாரின் இறுதிச்சடங்குக்கு முன் மலர்களின் தேவை தொடர்ந்து அதிகமாக இருக்கும் என கருதுவதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
AFP