நாடொன்றில் மோசமாக அடித்துக்கொண்ட பிரித்தானியர்கள்! திகிலடைந்த உள்ளூர்வாசிகள்
வியட்நாமில் பிரித்தானியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மோசமாக சண்டையிட்டது உள்ளூர்வாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வன்முறை
வியட்நாம் நாட்டில் உள்ள டா நாங் உணவகத்தில் அருகில் இருந்தவர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
பார் ஒன்றில் நடந்த இந்த சண்டையில் பிரித்தானியர்களுக்கும், சக சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே நடந்த வன்முறையால் உள்ளூர்வாசிகள் திகிலடைந்தனர்.
ஒரு ஆண் தற்செயலாக தனது சொந்த தாயை தாக்குவதாகவும், மற்றொரு ஆண் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
கொலை செய்வதாக மிரட்டல்
மேலும் அதில் தலையிட முயன்றவர்களை இருவரும் தாக்கியதாகவும், அதற்கு Pool பந்துகளை பயன்படுத்தியதுடன் தங்கள் வழியில் வந்த எவரையும் கொலை செய்வதாகவும் மிரட்டியதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த உள்ளூர்வாசிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் சர்வதேச கவனத்தை ஈர்க்குமாறு கோரிக்கை விடுத்த அவர்கள், எதிர்காலத்தில் வன்முறையைத் தடுக்க குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு காவல்துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |