அறுவை சிகிச்சை நடுவே செவிலியருடன் உறவு., மருத்துவருக்கு தொடர்ந்து பணியாற்ற அனுமதி
பிரித்தானியாவில், அறுவை சிகிச்சை நடுவே செவிலியருடன் உறவு கொள்ள சென்ற மருத்துவருக்கு தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் சுஹைல் அஞ்சும் (Suhail Anjum), 2023-ல் Tameside பொது மருத்துவமனையில் ஒரு நோயாளியை அறுவை சிகிச்சை நடுவே விட்டுவிட்டு, மற்றோரு அறையில் செவிலியருடன் உறவில் இருந்துள்ளார்.

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து
இச்சம்பவம் பிரித்தானிய மருத்துவ தீர்பாயத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
3 பிள்ளைகளுக்கு தந்தையான அஞ்சும், இந்த செயலுக்கு பொறுப்பேற்று ஒப்புதல் அளித்தார்.
அவரும் செவிலியரும் தகாத நிலையில் மற்றொரு செவிலியரால் பிடிபட்டனர். இந்த விவகாரம் மருத்துவமனையின் மேலாளருக்கு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவர் பாகிஸ்தானுக்கு திரும்பி அங்கு பணியாற்றிவந்துள்ளார்.
பிரித்தானிய மருத்துவ தீர்பாயத்தின் தீர்ப்பில், அவரது செயல் கேவலமான தவறாக கருதப்பட்டது. ஆனால், இது மீண்டும் நடைபெறும் அபாயம் குறைவாக இருப்பதால், அவருடைய மருத்துவ தகுதி பாதிக்கப்படவில்லை என தீர்மானிக்கப்பட்டது.
எனவே, அவருக்கு மீண்டும் பிரித்தானியாவில் மருத்துவ பணியை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இருப்பினும் அவரது பதிவு மீது 2 ஆண்டுகளுக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கை இடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் நோயாளிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், மருத்துவ அறையில் நடந்த இச்செயல் மருத்துவத் துறையின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
pakistan doctor caught with nurse mid surgery uk, pakistan doctor caught with nurse, UK medical tribunal, Tameside General Hospital