வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து
பிரித்தானிய அரசு கிட்டத்தட்ட 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்களை ரத்து செய்துள்ளது.
பிரித்தானிய அரசு, புலம்பெயர்வு விதிகளை தவிர்த்து, விதிகளை மீறும் நிறுவனங்களை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
2024 ஜூலை முதல் 2025 ஜூன் வரை மொத்தம் 1948 நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலார்களை வேலைக்கு அமர்த்தும் உரிமையை (sponsorship licence) இழந்துள்ளன.
இது பிரித்தானிய வரலாற்றில் மிகப் பாரிய தடை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
அதிகப்படியான தவறுகள் கணடறியப்பட்ட துறைகள்
- வயது முதியோர் பராமரிப்பு (Adult Social Care)
- உணவகத் துறை (Hospitality)
- சில்லறை விற்பனை (Retail)
- கட்டுமானம் (Construction)
இந்த நிறுவனங்கள், வேலை விசா முறையை தவறாக பயன்படுத்தி, புலம்பெயர்வு விதிகளை மீறுவதோடு, உள்ளூர் தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் மாற்றும் வகையில் வெளிநாட்டு ஊழியர்களை சுரண்டியதாக அரசு தெரிவித்துள்ளது.
2025-ல் சட்டவிரோத வேலைவாய்ப்பு தொடர்பான கைது எண்னிக்கை 51 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது 'பிரித்தானியாவிற்கு வந்தால் வேலை கிடைக்கும்' என்ற போலி வாக்குறுதிகளை நம்பி ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் புலம்பெயர்வோரை தடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
நாட்டில் தங்குவதற்கு உரிமை இல்லாத புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்ப ஒத்துழைக்காத நாடுகளுக்கான விசா அணுகலை குறைக்கும் திட்டத்தையும் பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |