மொரீஷியஸுக்கு ரூ.5,670 கோடி உதவித் தொகுப்பை அறிவித்த இந்தியா
மொரீஷியஸுக்கு ரூ.5,670 கோடி உதவித் தொகுப்பை இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் தாக்கத்தை சமாளிக்க, மொரீஷியஸுக்கு 680 மில்லியன் டொலர் (ரூ.5,670 கோடி) மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் நிதி உதவித் திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டம் மொரீஷியஸின் தேசிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகை, மானியங்கள் மற்றும் கடன் வரிகள் (Lines of credit) மூலம் வழங்கப்படும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் ஆகியோருக்கிடையில் வாரணாசியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- Sir Seewoosagur Ramgoolam தேசிய மருத்துவமனை கட்டுமானம்
- AYUSH Centre of Excellence அமைத்தல்
- விலங்குகள் மருத்துவமனை மற்றும் Veterinary School அமைத்தல்
- கடல் கண்காணிப்பிற்காக ஹெலிகாப்டர்கள் வழங்கல்
மேலும், கடல்சார் பாதுகாப்பு (maritime security) பகுதியில், இரு நாடுகளும் Chagos தீவுக்கூட்டத்தில் உள்ள Exclusive Economic Zone (EEZ) கண்காணிப்பிற்காக இணைந்து hydrographic survey நடத்த ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த உதவி, இந்தியாவின் Neighbourhood First கொள்கையின் ஒரு பகுதியாகவும், Net Security Provider என்ற தன்னாட்சி நோக்கத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி "இது உதவி அல்ல, நம்முடைய கூட்டு எதிர்காலத்திற்கான முதலீடு" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Mauritius 680M usd aid package, Modi Ramgoolam bilateral talks, Indian Ocean strategic partnership, India grants and credit lines Mauritius, AYUSH hospital Mauritius India, India maritime security Mauritius, Neighbourhood First policy India, India counter China Indian Ocean