கனடாவின் தற்காலிக வெளிநாட்டு வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றம்
கனடா அரசு தற்காலிக வெளிநாட்டு வேலைவாய்ப்பு திட்டத்தில் (Temporary Foreign Worker Program) முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
இந்த திட்டம் வெளிநாட்டு நபர்களை வேளைக்கு அமர்த்த கனடா நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முக்கிய வழியாகும்.
ஆனால், கடந்த 18 மாதங்களில், இந்த திட்டத்தின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மார்க் கார்னி, "இந்த திட்டம் குறிப்பிட்ட பிராந்தியங்கள் மற்றும் துறைகளின் தேவைகளை இலக்காக கொண்டிருப்பது அவசியம்" என லிபரல் கட்சி கூட்டத்தில் தெரிவித்தார்.
அவர் திட்ட மாற்றங்கள் குறித்து உறுதிப்படுத்தினாலும், முழுமையான விவரங்களை வெளியிடவில்லை.
TFWP மாற்றங்களின் முக்கிய அம்சங்கள்
- 2025-ல் 82,000 புதிய TFWP அனுமதிகள் இலக்காக நிர்ணயம்
- வேலைவாய்ப்பு வீழ்ச்சி 6 சதவீதத்திற்கு மேல் உள்ள பகுதிகளில் குறைந்த ஊதிய LMIA செயலாக்கத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்படும்
- மேலும், உயர் ஊதிய வேலைகளுக்கான ஊதிய வரம்பை பிராந்திய சராசரியை விட 20 சதவீதமாக உயர்த்துதல்
- நிறுவனங்கள் TFWP ஊழியர்களை அமர்த்தும் வரம்பு குறைக்கப்படும்
மேலும், spousal open work permits (SOWP) வழங்கும் விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இப்போது TEER 0, TEER 1 மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட TEER 2, TEER 3 வேளைகளில் உள்ளவர்களின் துணைவியருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
மேலும், TFWP அனுமதி குறைந்தபட்சம் 16 மாதங்கள் இருக்க வேண்டும்.
2025 ஜனவரி-ஜூன் காலத்தில் TFWP அனுமதிகள் 50 சதவீதம் குறைந்துள்ளன. மொத்தமாக 33,722 புதிய அனுமதிகள் மேட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,இந்த மாற்றங்கள் கனடாவின் வேலை சந்தையை பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada TFWP changes 2025, Temporary Foreign Worker Program Canada, Canada work permit restrictions 2025, Mark Carney immigration reforms, Spousal open work permit Canada, TEER job eligibility Canada