கிம் ஜாங்-உன்னின் ரிசார்ட்... பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வட கொரியாவின் பெனிடார்ம் என்று விவரிக்கப்படும் கடற்கரை சுற்றுலா தலத்திற்குச் செல்ல நூற்றுக்கணக்கான பிரித்தானியர்கள் பதிவு செய்துள்ளதை அடுத்து, கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரமாண்ட திறப்பு விழா
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் வொன்சன்-கல்மா கடற்கரை ரிசார்ட் என்பது வொன்சானில் உள்ள முன்னாள் ஏவுகணை ஏவுதளத்தில் அமைந்துள்ளது. ஆனால் சில சுற்றுலாப் பயணிகளால் குறித்த கடற்கரை பகுதியை ஸ்பெயின் நாட்டின் சுற்றுலா பகுதியுடன் ஒப்பிட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது.
உண்மையில் தனது சொந்த சுற்றுலா தலத்தின் பிரமாண்ட திறப்பு விழாவிற்கு தயாராகும் வகையில், கிம் 2017 ஆம் ஆண்டு ஸ்பெயினின் கோஸ்டா பிளாங்காவிற்கு ஒரு குழுவை அனுப்பியதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பிரமாண்டமான திறப்பு விழா தற்போது நெருங்கி வருகிறது. பல வருட தாமதத்திற்குப் பிறகு, ஜூலை மாதம் முதல் ரிசார்ட்டுக்கான முதல் பயணங்கள் நடைபெறும், ரஷ்ய பயண நிறுவனம் மூலம் இடங்களை நிரப்பவும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
ஆனால் தற்போது பிரித்தானியாவில் இருந்தும் 250 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், மிகவும் ஆபத்தான பகுதிகளுக்கு பயணப்படுபவர்கள் கூட முன்பதிவு செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர், ஏனெனில் அது தேவையற்ற ஒருவழிப் பயணமாக முடிவடையும் என்றே எச்சரித்துள்ளனர்.
பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை
மட்டுமின்றி, வட கொரியாவில் மனித உரிமைகள் குழுவின் நிர்வாக இயக்குனர், இந்த வருகைகள் பாதுகாப்பற்றவை மட்டுமல்ல, ஒழுக்கக்கேடானவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் ரஷ்ய குடிமக்கள் அங்கு விடுமுறைக்குச் செல்வது என்பது ரஷ்யாவும் வட கொரியாவும் பரிதாபகரமான முறையில் தனிமைப்படுத்தப்பட்டதற்கு சான்றாகும் என்றார்.
வெளிநாட்டுப் பயணிகள் வட கொரியாவுக்குப் பயணம் செய்வது கேள்விப்படாத ஒன்றுதான், ஆனால் சிலர் உயிருடன் திரும்பி வருவதில்லை என அவர் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, வட கொரியாவிற்கு அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களுக்கும் எதிராக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |