ஏவுகணைகளால் சுழன்றடிக்கும் ஈரான்... மத்திய கிழக்கில் சிக்கியுள்ள 80,000 பிரித்தானியர்கள்
அமெரிக்காவை பழிவாங்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திவரும் நிலையில், வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திட்டங்கள் தடைபட்டுள்ளது
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர், மத்திய கிழக்கில் உள்ள 76,000 பிரித்தானியர்கள் அரசாங்கத்தில் தங்கள் இருப்பைப் பதிவு செய்துள்ளனர்.

அவர்களை மீட்டு வருவதற்கு அரசாங்க அதிகாரிகள் தரப்பு 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர், வெளியேற்றங்கள் உட்பட தற்போதுள்ள அனைத்து வாய்ப்புகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், விமான சேவைகள் முடக்கப்பட்டதால் அமைச்சர்களின் திட்டங்கள் தடைபட்டுள்ளதை அடுத்து, பிரித்தானியர்கள் தற்போது அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு கூறப்படுகிறார்கள்.
அத்துடன், பஹ்ரைன், இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பிரித்தானியர்கள் அரசாங்கத்திடம் தங்கள் இருப்பிடத்தை அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பயண நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில்
மேலும், எமிரேட்ஸ், கத்தார் மற்றும் எதிஹாட் உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் அனைத்தும் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இந்த நடவடிக்கை வைட்ஹால் இதுவரை கையாண்ட மிகப்பெரிய தூதரக நெருக்கடிகளில் ஒன்றாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
இதனிடையே, அரசாங்கத்திற்கு இருப்பிடம் மற்றும் தொடர்பு விவரங்களை வழங்கிய பிரித்தானியர்களில் முக்கால்வாசி பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளனர்.

சிக்கித் தவிக்கும் பிரித்தானியர்களுக்கு உதவ வெளிவிவகாரச் செயலாளர் யெவெட் கூப்பர் வார இறுதியில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
துபாயில் தற்போது சுமார் 250,000 பிரித்தானியர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக ஜி.சி.சி, மத்திய கிழக்கு நாடுகளில் இன்று 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |