அதீத வெப்பத்தைத் தொடர்ந்து கடும் குளிர் தாக்கலாம்: எரிசக்தி நிறுவனத்தின் பரிந்துரை
Brits told to stockpile these six foods now: பிரித்தானியர்கள், மோசமான வானிலையை எதிர்கொள்வதற்காக ஆறு உணவுப்பொருட்களை சேமித்துவைக்குமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியா, உட்பட பல நாடுகள், எல் நினோ என்னும் இயற்கை நிகழ்வின் காரணமாக அதீத வெப்பத்தை எதிர்கொண்டது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், அதீத வெப்பத்தைத் தொடர்ந்து கடும் குளிர் தாக்கலாம் பருவநிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

எல் நினோ, துருவங்களில் காணப்படும் குளிர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், ஆகவே, பிரித்தானியா முதலான நாடுகள் கடும் குளிரால் பாதிக்கப்படக்கூடும் என்றும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
எரிசக்தி நிறுவனத்தின் பரிந்துரை
இந்நிலையில், எரிசக்தி நிறுவனமான Direct Energy நிறுவனம், பிரித்தானியர்கள் சில உணவுப்பொருட்களை வாங்கி சேமித்துவைத்துக்கொள்ளுமாறு பரிந்துரை செய்துள்ளது.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக கடைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டாலோ அல்லது மின்தடை ஏற்பட்டாலோ, நிலைமை சீராகும் வரை காத்திருப்பதால் சாப்பிட இயலாத நிலை ஏற்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கையை எடுக்குமாறு Direct Energy நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர், பாண், பால், டின்களில் அடைக்கப்பட்ட சூப் போன்ற உணவுகள், ஸ்நாக்ஸ் வகை உணவுகள், பாஸ்தா மற்றும் சாஸ் ஆகியவற்றை வாங்கி சேமித்துவைத்துக்கொள்ளுமாறு அந்நிறுவனம் பிரித்தானியர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது.