இன்னும் ஒரு வாரம் தான்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை
பிரித்தானியர்களுக்கு பாஸ்போர்ட் தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் புதுப்பித்தல் கட்டணம் உயர்வு
அடுத்த வியாழக்கிழமை, அதாவது, பிப்ரவரி 2ஆம் திகதி, பாஸ்போர்ட் புதுப்பித்தல் கட்டணங்கள் உயர இருக்கின்றன.
ஒன்லைனில் பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்கான கட்டணம் 75.50 பவுண்டுகளிலிருந்து 82.50 பவுண்டுகளாக உயர இருக்கிறது.
சிறுவர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணமும் 49 பவுண்டுகளிலிருந்து 53.50 பவுண்டுகளாக உயர இருக்கிறது.
தபால் நிலையம் மூலமாக புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பக்கட்டணம், பெரியவர்களுக்கு 85 பவுண்டுகளிலிருந்து 93 பவுண்டுகளாகவும், சிறுவர்களுக்கு 58.50 பவுண்டுகளிலிருந்து 64 பவுண்டுகளாகவும் உயர இருக்கிறது.
ஒரு வாரம் மட்டுமே
இப்படி பாஸ்போர்ட் புதுப்பித்தல் முதலான விடயங்களுக்கான கட்டணங்கள் பிப்ரவரி 2ஆம் திகதி சுமார் 9 சதவிகிதம் உயர இருப்பதால், தற்போதைய கட்டணத்தில் பாஸ்போர்ட் புதுப்பிக்க இன்னமும் ஒரு வாரமே உள்ளது.
ஆகவே, தங்கள் பாஸ்போர்ட்களை புதுப்பிக்கவேண்டிய பிரித்தானியர்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.