3,500 ஆண்டுகள் பழமையான தங்க நகைகள் கண்டுபிடிப்பு
கிரேக்க நாட்டின் ஏஜினா தீவில் உள்ள கோலோனா பகுதியில் 3,500 ஆண்டுகள் பழமையான தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நகைகள் வெண்கல யுகத்தின் நடுப்பகுதியைச் சேர்ந்தவை என கிரேக்க கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டு ஆஸ்திரிய தொல்லியல் நிறுவனம் மற்றும் சால்ஸ்பர்க் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய அகழாய்வில், உயர்ந்த சமூகத்தினருக்குச் சொந்தமானதாக கருதப்படும் தங்க மாலையின் பகுதிகள் வெளிச்சத்துக்கு வந்தன.
இதில் தங்க முத்துக்கள், தங்க இலை அலங்காரங்கள், கார்னேலியன் கற்கள் போன்றவை அடங்கும்.

ஏஜினா தீவு பழங்காலத்தில் மத்தியதரைக் கடல் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்ததை இந்த கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகிறது.
குறிப்பாக, கார்னேலியன் போன்ற கற்கள் அப்பகுதியில் கிடைக்காதவை என்பதால், தொலைதூர வர்த்தக தொடர்புகள் இருந்ததை இது காட்டுகிறது.
மேலும், இந்த நகைகள் 1892-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஏஜினா பொக்கிஷங்களின் வடிவமைப்புடன் ஒத்துப்போகிறது.
இதனால், ஏஜினா பழங்காலத்தில் கலை மற்றும் வர்த்தக பரிமாற்றத்தின் முக்கிய மையமாக இருந்தது என்பதற்கான ஆதாரம் வலுப்பெற்றுள்ளது.
இந்த அகழாய்வை பேராசிரியர் அலெக்சாண்டர் சோகோலிசெக் தலைமையில் நடத்தி வருகிறார். கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் ஏஜினாவில் பாதுகாக்கப்பட்டு, எதிர்கால ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |