ஹாரி புரூக் 35 பந்தில் 78 ரன், சால்ட் 56 பந்தில் 85! நியூஸிலாந்திற்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து 236 ஓட்டங்கள் குவித்தது.
புரூக், சால்ட்
கிறிஸ்ட்சர்ச்சில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்ய இங்கிலாந்து முதலில் துடுப்பாடியது.
ஜோஸ் பட்லர் 4 ஓட்டங்களில் வெளியேற, பெத்தேல் 12 பந்துகளில் 24 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து கைகோர்த்த பில் சால்ட், ஹாரி புரூக் கூட்டணி வாணவேடிக்கை காட்டியது.
236 ஓட்டங்கள்
சிக்ஸர்களை பறக்கவிட்ட அணித்தலைவர் ஹாரி புரூக் (Harry Brook) 35 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.
அதே ஓவரில் பில் சால்ட் (Phil Salt) 85 (56) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகள் அடங்கும்.
டாம் பான்டோன் 12 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் விளாச, இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 236 ஓட்டங்கள் குவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |