18 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணன் தங்கையை ஒன்றுசேர வைத்த உடைந்து போன பல்
சமூக வலைதளம் மூலம் உடைந்த பல்லை வைத்து அண்ணன் தங்கை இருவரும் ஒன்றுசேர்ந்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
அண்ணன் - தங்கை
சமீப காலமாகவே தொலைந்து போனவர்களை சமூக வலைதளம் மூலம் கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், கான்பூரைச் சேர்ந்த ராஜ்குமாரி என்பவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை பார்த்து வருவது வழக்கம். அந்தவகையில், ஒரு நாள் அவர் ரீல்ஸ் பார்க்கும் போது அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
அதாவது, அவர் பார்க்கும் ரீல்ஸில் வரும் முகம் அவருக்கு ஏற்கனவே பார்த்த முகமாக இருந்துள்ளது. பின்னர், அதனை உற்று பார்க்கும் போது தான் தொலைந்து போன அண்ணன் என்று தெரியவந்துள்ளது.
18 ஆண்டுகளுக்கு முன்பாக ராஜ்குமாரின் அண்ணன் பால் கோவிந்த் என்பவர் மும்பையில் வேலை தேடுவதற்காக சென்றுள்ளார். ஆனால், அவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரை பற்றி விசாரிக்கும் போதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் உடைந்து போன பல்லை வைத்து தான் ரீல்ஸில் வருபவர் தனது அண்ணன் தான் என்பதை ராஜ்குமாரி கண்டுபிடித்துள்ளார்.
பிறகு, சந்தோஷத்தில் தனது அண்ணனுக்கு போன் செய்து வீட்டிற்கு வரும்படி கேட்டுள்ளார். பின்னர், கடந்த 20 -ம் திகதி கோவிந்தன் தனது கிராமத்திற்கு வந்துள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |