பிரித்தானியாவில் காணாமல் போன சகோதரர்கள்! சிறுவர்கள் அடையாளங்களை வெளியிட்ட பொலிஸார்!
பிரித்தானியாவில் இரண்டு சகோதர்கள் காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காணாமல் போன சகோதர்கள்
பிரித்தானியாவில் இரண்டு சகோதர்கள் திங்கட்கிழமை வீட்டில் இருந்து காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
ஆகஸ்ட் 12ம் திகதி காலை 9.40 மணியளவில் மேற்கு யார்க்ஷயரின்(West Yorkshire) லிவர்செட்ஜ் (Liversedge) பகுதியில் உள்ள வீட்டில் இருந்து யூசப் அகமது(Yousuf Ahmad, 13) மற்றும் முகமது அஹ்மத்(Muhammad Ahmad, 10) என்ற இரண்டு சிறுவர்களும் கடைசியாக பார்க்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போன சகோதர்கள் ஒன்றாக இருக்கலாம் என்று நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்களின் அடையாளங்கள்
13 வயது சிறுவனான யூசப் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர், அவர் கடைசியாக ஸ்காட் கிரே ஹூடி (Scott grey hoodie), நார்த் ஃபேஸ் கால்சட்டை(North Face trousers) மற்றும் கண்ணாடி அணிந்து இருந்துள்ளார்.
பிறந்து 4 நாட்களே ஆன இரட்டை குழந்தைகள்: பிறப்பு சான்றிதழ் வாங்க சென்ற தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!
10 வயது சிறுவனான முகமது சுமார் 4 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர், கருப்பு ஹூடி(black hoodie) சாம்பல் நிற டிராக்சூட் பாட்டம்ஸ்(grey tracksuit bottoms) அணிந்து இருந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |