பிறந்து 4 நாட்களே ஆன இரட்டை குழந்தைகள்: பிறப்பு சான்றிதழ் வாங்க சென்ற தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!
பாலஸ்தீனத்தில் பிறந்து 4 நாட்களே ஆன இரட்டை குழந்தைகள் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பறிப்போன குழந்தைகள் உயிர்
ரஃபாவில் இருந்து 10 கி மீ தொலைவில் அமைந்துள்ள கான் யூனிஸ் நகரில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் தங்குமிடத்தில் பிறந்து 4 நாட்களே ஆன இரட்டை குழந்தைகள் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகமது மஹ்தி அபு அல்-கும்சன் என்பவரின் மனைவி கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
Aser and Aysal, twins born four days ago, were killed this morning in an Israeli airstrike, along with their mother Dr. Jumana, east of Deir al-Balah. The father was out of the house preparing their birth certificates, he returned home to find that his family is no longer there. pic.twitter.com/q4AnfZRt9h
— Yousef D. Hammash (@YousefHammash) August 13, 2024
போருக்கு மத்தியில் பிறந்த இந்த இரட்டை குழந்தைகளுக்கு ஐசெல், ஐசெர் அபு அல்-கும்சன் என தம்பதியினர் பெயரிட்டுள்ளனர்.
அத்துடன் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக முகமது மஹ்தி அபு அல்-கும்சன் அரசு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
காத்திருந்த அதிர்ச்சி
இந்நிலையில் தனது இரட்டை குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழை வாங்கிவிட்டு திரும்பிய முகமது மஹ்தி அபு அல்-கும்சனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
முகமது மஹ்தி அபு அல்-கும்சனின் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதி மீது இஸ்ரேலிய ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் அவரது மனைவி மற்றும் இரட்டை குழந்தைகள் என மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |