பிரபல ஐரோப்பிய நாட்டின் தலைநகரில் புதிய தடை உத்தரவு பிறப்பிப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 'Freedom Convoy’ வாகன ஓட்டிகள் நுழைய பிராந்திய அரசாங்கம் தடை வித்துள்ளது.
Freedom Convoy போராட்டகாரர்கள் திங்கட்கிழமை பிரஸ்ஸல்ஸ் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, நகருக்குள் 'Freedom Convoy’ வாகன ஓட்டிகள் நுழைய பாரிஸ் காவல்துறை தடை வித்துள்ளது.
இந்நிலையில் பிரஸ்ஸல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரஸ்ஸல்ஸில் வருவதற்கான முக்கிய சாலைகளில் மத்திய பொலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். போராட்டம் நடத்த வரும் வாகனங்களை கட்டுப்படுத்துவார்கள்.
பிரஸ்ஸல்ஸ் நகர அரசாங்கம், தங்கள் பிரதேசத்தில் டிரக்குகளுடனான ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்யும் ஆணைகளை வெளியிடும்.
தற்போது வரை போராட்டத்திற்கு அனுமதி கேட்டு எந்த கோரிக்கையும் வரவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.