விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அணியில் இருந்து நீக்கம்
brydon carse removed from england squad after hand cupped issue: விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பிரைடன் கார்ஸ் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரைடன் கார்ஸ்
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
கவுண்டி கிரிக்கெட் விளையாடுவதற்காக முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாத இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸ்(brydon carse) 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற்றிருந்தார்.

கடந்த வாரம் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் டெர்பிஷயருக்கு எதிராக டர்ஹாம் அணி 338 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை கொண்டாட ஆகஸ்ட் 22 ஆம் திகதி இரவு டெர்பி நகரில் உள்ள 'மோலி மலோனின் ஐரிஷ் டேவர்ன்' என்ற பிரபல நைட் கிளப்பிற்கு சக வீரர்கள் பெண் ஸ்டோக்ஸ், மேத்யூ பாட்ஸ் ஆகியோருடன் பிரைடன் கார்ஸ் சென்றுள்ளார்.
அங்கு மதுபோதையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக கூறி பிரைடன் கார்ஸ் காவல்துறையால் விலங்கு மாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து வெளியேற அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, சிறிது நேரத்திலேயே கைது நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
Durham bowler Brydon Carse, who is in England squad for second Test, was released without charge after a nightclub incident while celebrating victory over Derbyshire@willis_macp has the details ⤵️https://t.co/4YXyQWChe5 pic.twitter.com/zFKA3lgPVi
— Telegraph Cricket (@TeleCricket) August 23, 2026
அவர் கைது செய்யப்படும் போது பெண் ஸ்டோக்ஸ், மேத்யூ பாட்ஸ் அருகிலுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அணியிலிருந்து நீக்கம்
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ECB) பரிந்துரையைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் ஒழுங்குமுறை ஆணையம் விசாரிக்க உள்ளது.
விசாரணை முடிவடையும் வரை டெஸ்ட் போட்டியில் பிரைடன் கார்ஸ் இடம் பெற மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பிரைடன் கார்ஸுக்கு பதிலாக சோனி பேக்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |