BSA கோல்ட் ஸ்டார் 650 மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்: ராயல் என்ஃபீல்டு-க்கு போட்டியாளராக இருக்குமா?
இந்திய சந்தையில் BSA மோட்டார் சைக்கிள் பிராண்ட் தனது அறிமுகத்தை இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, 2024 அன்று, அதன் சமீபத்திய மாடலான BSA கோல்ட் ஸ்டார் 650 ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் மேற்கொள்ள உள்ளது.
2021 இல் உலகளவில் அறிமுகமான கோல்ட் ஸ்டார் 650 ஏற்கனவே ஐரோப்பாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது.
இந்த கோல்ட் ஸ்டார் மோட்டார் சைக்கிளானது விரைவில் இந்திய சந்தையை எட்டி உள்ளது, இதன் விலை விலை ரூ. 3,00,000 முதல் ரூ. 3,30,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் தலைமுறை பிஎஸ்ஏ வாகனங்கள் அவற்றின் புதுமையான வடிவமைப்பு, சிறந்த கட்டுமானம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவை, அவை அனைத்தும் நியாயமான விலையில் வழங்கப்பட்டன.
சிறப்பம்சங்கள்
BSA கோல்ட் ஸ்டார் 650 மோட்டார் சைக்கிளில் சக்தி வாய்ந்த 650cc என்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.
இது 45.6 bhp மற்றும் 55 Nm இழுவை(torque) உற்பத்தி செய்கிறது.
ஆறு வேக கியர்பாக்ஸ், 12 லிட்டர் எரிபொருள் தொட்டி மற்றும் இரட்டை சேனல் ABS பிரேக் சிஸ்டம் ஆகியவை இந்த பைக்கில் இடம்பெறும்.
இந்த பைக் அறிமுகமானதும், ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650, ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 மற்றும் ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியர் 650 ஆகியவற்றுக்கு கடும் போட்டி கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |