சீனாவில் மிகப்பெரிய கப்பல் வெடிப்பு விபத்து: பரபரப்பு வீடியோ காட்சி
சீன துறைமுகத்தில் மிகப்பெரிய கொள்கலன் கப்பலில் வெடிப்பு விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கப்பல் விபத்து
உலகின் மிகவும் பரபரப்பான துறைமுகமான ஷாங்காயின் நிங்போ-ஜூஷானில்(Ningbo-Zhoushan Port) வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு பெரிய கொள்கலன் கப்பலில் பயங்கரமான வெடிப்பு ஏற்பட்டது.
வெளியாகியுள்ள வீடியோக்களில், கப்பலை ஒரு பெரிய நெருப்புப் பந்து சூழ்ந்த இருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
Aug 9: there’s a massive explosion on board Liberia-flagged container vessel YM Mobility docked at the Beilun port in Zhejiang’s Ningbo-Zhoushan Port at around 1:40 pm.
— Byron Wan (@Byron_Wan) August 9, 2024
YM Mobility is owned by Yang Ming Marine Transport Corporation. The ship was reportedly transporting hazardous… pic.twitter.com/FDyg5bgZOi
தைவானைச் சேர்ந்த யாங் மிங் மரைன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான YM மொபிலிட்டி என்ற கப்பலில் இந்த விபத்து ஏற்பட்டது.
கப்பலில் ஆபத்தான பொருட்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படவில்லை.
கணக்கிடப்பட்டு வரும் சேதம்
வெடிப்பால் ஏற்பட்ட பெரிய தீ கப்பலில் வேகமாக பரவியது.
தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.
கப்பல் மற்றும் துறைமுக கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு இன்னும் மதிப்பிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |